வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#வெங்காய ரெசிபி

வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)

#வெங்காய ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
40நிமிடம்
  1. 200 கிராம்வெங்காயம்
  2. 100 கிராம்துவரம் பருப்பு
  3. 50 கிராம்பாசிப் பருப்பு
  4. 100 கிராம்தக்காளி
  5. 50 கிராம்உருளைக்கிழங்கு
  6. 3பச்சைமிளகாய்
  7. சிறிதுமல்லி கருவேப்பிலை
  8. ஒரு ஸ்பூன்சாம்பார் பொடி
  9. அரை ஸ்பூன்மஞ்சள் பொடி
  10. சிறிதுபெருங்காயம்
  11. தேவைக்குஉப்பு
  12. அரை ஸ்பூன்கடுகு
  13. தேவையான பொருள்வறுத்து அரைக்க
  14. 10காய்ந்த மிளகாய்
  15. 4 ஸ்பூன்தனியா
  16. இரண்டு ஸ்பூன்பெருங்காயம் ஒரு துண்டு கடலைப்பருப்பு
  17. ஒரு ஸ்பூன்வெந்தயம்
  18. 2 கப்இட்லி மாவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பு பாசிப்பருப்பை கழுவி மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை கழுவி நறுக்கி வைக்கவும். வறுத்து அரைக்க தேவையான பொருட்களை தனித்தனியே வெறும் சட்டியில் போட்டு வறுத்து ஆறவைத்து அரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் 4 ஸ்பூன் நெய் விட்டு கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி பாதி அளவு உப்பு போட்டு வேக வைக்கவும் இவை அனைத்தும் வெந்து வருகையில் உருளைக்கிழங்கு சாம்பார் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். வறுத்தரைத்த பொடியை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். இவை அனைத்தும் சேர்ந்து கொதித்து வரும் பொழுது இரண்டு ஸ்பூன் நெய் விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்

  3. 3

    இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து ஒரு பவுலில் அடுக்கவும். அதன் மேல் வெங்காய சாம்பாரை நிரப்பி 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி பரிமாறவும் சுவையான வெங்காய சாம்பார் மினி இட்லி தயார் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மினி இட்லி வெங்காய சாம்பார்அனைவர் வீட்டிலும் சமைக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes