அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. மேல்மாவு செய்வதற்கு:
  2. ஒரு கப்கோதுமை மாவு
  3. 2 டீஸ்பூன்மைதா மாவு
  4. 2 டீஸ்பூன்எண்ணெய்
  5. அரை டீஸ்பூன்உப்புத் தூள்
  6. தேவையான அளவுதண்ணீர்
  7. ஸ்டஃப்பிங் செய்வதற்கு
  8. 6பொடியாக நறுக்கிய பூண்டுப் பற்கள்
  9. ஒன்றுபொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. 10பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  11. 2பொடியாக நறுக்கிய கேரட்
  12. ஒரு கப்பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்
  13. அரை டீஸ்பூன்மிளகுத்தூள்
  14. அரை டீஸ்பூன்உப்புத் தூள்
  15. 2 டீஸ்பூன்எண்ணெய்
  16. மோமோஸ் சட்னி செய்வதற்கு:
  17. 2தக்காளி
  18. ஒன்றுகாய்ந்த மிளகாய்
  19. 4பூண்டுப்பற்கள்
  20. அரை டீஸ்பூன்மிளகுத்தூள்
  21. ஒரு டீஸ்பூன்சர்க்கரை
  22. அரைடீஸ்பூன்உப்புத் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவுடன் மைதா மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து சப்பாத்தி மாவு போல மிருதுவாக பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்

  2. 2

    ஸ்டெப்பிங் செய்வதற்கு சூடான வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்

  3. 3

    அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து முக்கால் பாகம் காய் வேகும் வரை வதக்கி வைக்கவும்.

  4. 4

    மேல் மாவை பெரிய சப்பாத்திகளாக திரட்டி அவற்றை சிறுசிறு வட்ட சப்பாத்திகளாக வெட்டி வைக்கவும்.

  5. 5

    சிறிய சப்பாத்திகளின் நடுவில் ஸ்டஃப்பிங்வைக்கவும்.

  6. 6

    சிறிய சப்பாத்தியின் ஓரத்தை புடவை கொசுவம் போல மடித்து நடுவில் ஒட்டவும்

  7. 7

    எல்லா மாவையும் இதுபோல் செய்து வைத்த பிறகு அவற்றை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்

  8. 8

    மோமோஸ் சட்னி செய்வதற்கு இரண்டு தக்காளியையும் ஒரு காய்ந்த மிளகாயையும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்

  9. 9

    வேக வைத்து ஆற வைத்த தக்காளியுடன் அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, பூண்டு பற்கள் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes