எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. ஜாமூன் செய்ய:
  2. 6 ஸ்லைஸ் ப்ரட்
  3. 1/2 கப் சீரோட்டி ரவை
  4. 2டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  5. 2 ஸ்பூன் மைதா
  6. 2 சிட்டிகை சோடா உப்பு
  7. 3டேபிள்ஸ்பூன் நெய்
  8. 1 கப் சூடான பால்
  9. சர்க்கரை சிரப் செய்ய:
  10. 2 கப் சர்க்கரை
  11. 3/4 கப் தண்ணீர்
  12. 6 ஏலக்காய்
  13. 1/2 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  14. நெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சர்க்கரை சிரப் செய்ய:

  2. 2

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    ஏலக்காய் ஐ இடித்து தூள் செய்து போட்டு கொதிக்க விடவும்

  4. 4

    ஒரு கம்பி பதம் வந்ததும் ஒரு துளி லெமன் சாறு விட்டு கலந்து ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கி வைக்கவும்

  5. 5

    ஜாமூன் செய்ய:

  6. 6

    வெறும் வாணலியில் ரவையை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுக்கவும்

  7. 7

    ப்ரட்டின் ஓரங்களை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி வைக்கவும்

  8. 8

    பின் ரவை உடன் நறுக்கிய ப்ரட் துண்டுகள் சேர்த்து சூடான பால் விட்டு பதினைந்து நிமிடங்கள் வரை ஊறவிடவும்

  9. 9

    பின் நெய் உடன் சோடா உப்பு சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்

  10. 10

    பின் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  11. 11

    பின் ஊறவைத்த ரவை ப்ரட் கலவையை சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்

  12. 12

    பின் மைதா தூவி நன்கு சாப்ட்டாக பிசைந்து கொள்ளவும் அடித்து அழுத்தி பிசைய வேண்டாம் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்

  13. 13

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

  14. 14

    வாணலியில் நெய் விட்டு சூடானதும் சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  15. 15

    நெய் அதிக சூட்டில் இருக்க கூடாது தீயை குறைத்து வைத்து நிதானமாக பொரித்து எடுக்கவும்

  16. 16

    முழுவதும் நெய்யில் பொரித்தால் சுவை நன்றாக இருக்கும் நெய் அதிக அளவில் வேண்டாம் என்று நினைத்தால் நெய் மற்றும் எண்ணெய் கலந்து கொள்ளவும்

  17. 17

    பின் பொரித்த உருண்டைகளை இளஞ்சூடான சர்க்கரை பாகில் போட்டு மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes