தயிர் சேமியா (Thayir Semiya recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

தயிர் சேமியா (Thayir Semiya recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்சேமியா -
  2. 3 கப்தயிர் -
  3. 1 கப்தண்ணீர் -
  4. 1/4 டீஸ்பூன்கடுகு -
  5. 1 டேபிள் ஸ்பூன்கடலைப் பருப்பு -
  6. 2 டேபிள் ஸ்பூன்நிலக்கடலை -
  7. 1 டீஸ்பூன்உளுந்தம் பருப்பு -
  8. 3வற்றல் மிளகாய் -
  9. 1பச்சை மிளகாய் -
  10. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள் -
  11. கொஞ்சம்கறிவேப்பிலை -
  12. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் -
  13. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் துருவல் -
  14. தேவைக்குஉப்பு -
  15. ஒரு சிட்டிகைசர்க்கரை -
  16. 1 டேபிள் ஸ்பூன்முந்திரிப் பருப்பு -
  17. கொஞ்சம்மல்லித்தழை -

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கொதி விட்டு சேமியாவை அதில் போட்டு வேக வைக்க வேண்டும்.

  2. 2

    சேமியா வெந்ததும் அதில் உள்ள நீரை வடிகட்டி பின் குளிர்ந்த நீரில் அலசி, அந்த தண்ணீரை வடிகட்டி விட்டு, சேமியாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    பின்னர் தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை, வற்றல் மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிரில் ஊற்றவும்.

  5. 5

    பின் மிக்ஸி ஜாரில் முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து அந்த விழுதையும் தயிரில் சேர்க்க வேண்டும்.

  6. 6

    இறுதியாக வேக வைத்த சேமியாவையும் தயிரில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

  7. 7

    இப்போது சுவையான தயிர் சேமியா ரெடி. இதன் மேல் நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes