எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6 ஸ்லைஸ் பிரட்
  2. 3 மேசைக்கரண்டி கோகோ பவுடர்
  3. 1/4 கப் சாக்லேட்
  4. 11/2 கப் சீனி
  5. 11/2 கப் பால்
  6. 1/2 கப் கஸ்டர்ட் பவுடர்
  7. 1/2 கப் தண்ணீர்
  8. கேரமல் செய்ய
  9. 1/2 கப் சீனி
  10. அலங்கரிக்க
  11. பாதாம், பிஸ்தா துண்டுகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கஸ்டர்ட் பவுடரை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

  2. 2

    பிரட் ஸ்லைஸ் ஓரங்களை நீக்கி மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

  3. 3

    சீனியைக் கேரமல் செய்யவும். அதை ஒரு பவுலில் ஊற்றி அடிப்பகுதி முழுவதும் பரவும் படி செய்யவும்.

  4. 4

    ஒரு நான்ஸ்டிக் கடாயில் சீனி, கோகோ பவுடர், பால் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  5. 5

    பின்னர் அடுப்பில் வைத்து சாக்லேட் சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    சாக்லேட் கரைந்ததும் கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை ஊற்றிக் கிளறவும்.

  7. 7

    கலவை கெட்டியானதும் பிரட் பவுடர் சேர்த்துக் கிளறவும்.

  8. 8

    வேறொரு அடுப்பில் இட்லி பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  9. 9

    கலவை நன்கு கலந்து வந்ததும் இறக்கி கேரமல் இருக்கும் பவுலில் ஊற்றி அலுமினியம் ஃபாய்ல் கொண்டு மூடவும்.

  10. 10

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் அதனுள் புட்டிங் கலவையை வைத்து முப்பது நிமிடங்கள் வேகவிடவும்.

  11. 11

    வெந்ததும் எடுத்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் நான்கு மணி நேரம் குளிர வைக்கவும்.

  12. 12

    பரிமாறும் போது ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து புட்டிங்கை ஒரு தட்டில் கவிழ்த்தவும். பாதாம், பிஸ்தா துண்டுகள் தூவி, துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes