அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)

Iswarya
Iswarya @cook_17224977

#book
மிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 7-10சின்ன வெங்காயம் அல்லது ஒரு பெரிய வெங்காயம்
  2. 10-15 பற்கள்பூண்டு-
  3. எலுமிச்சை பழ அளவுபுளி - பெரிய
  4. 3 ஸ்பூன்தனியா/ வர கொத்தமல்லி
  5. 1.5 ஸ்பூன்கடலைப்பருப்பு
  6. 1.5 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
  7. 1.5 ஸ்பூன்துவரம்பருப்பு
  8. 2-3 ஸ்பூன்மிளகு
  9. 1 ஸ்பூன்பச்சரிசி
  10. 4காய்ந்த மிளகாய்
  11. 1 ஸ்பூன்சீரகம்
  12. 1 ஸ்பூன்வெல்லம்
  13. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  14. பெருங்காயம்
  15. கறிவேப்பிலை
  16. தேவையான அளவுஉப்பு
  17. தேவையான அளவுநல்லெண்ணெய்
  18. 1/2 ஸ்பூன்கடுகு-

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் தனியா, சீரகம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு,மிளகு,அரிசி, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுக்கவும்.

  2. 2

    வறுத்த பொருட்களுடன் 1 பெரிய அல்லது 5 சின்ன வெங்காயம்,5 பூண்டு பற்கள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

  4. 4

    கடாயில் 4 முதல் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அரைத்து வைத்த விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு முதலியவற்றை சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் அந்த கரைசலை கடாயில் சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    10-12 நிமிடங்களுக்குப் பிறகு புளி வாசனை முற்றிலும் அகன்று குழம்பு நன்றாக கொதிக்கும் நிலையில் வெல்லம் சேர்க்கவும்..

  8. 8

    1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.. சுவையான மிளகு பூண்டு குழம்பு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Iswarya
Iswarya @cook_17224977
அன்று

Similar Recipes