ரசமலாய் (rasamalai recipe in Tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 லிட்டர்பால்
  2. 2 மே.கஎலுமிச்சை சாறு அல்லது வினிகர்
  3. 1 மே.கஏலக்காய் தூள்
  4. 1 கப்சீனி
  5. சிறிதுகுங்கும பூ

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    1 லிட்டர் பாலை காய்ச்சவும். பொங்கி வரும் போது சிறிது எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து கலந்து விடவும்

  2. 2

    தொடர்ந்து கிளறவும். பால் திரிந்து தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரிந்து விடும்

  3. 3

    பின்னர் அதை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி கொள்ளவும்.நல்ல தண்ணீர் ஊற்றி 2 அல்லது3 முறை நன்றாக அலசி கொள்ளவும்.எலுமிச்சை சாறு அல்லது வினிகரின் கசப்பு தன்மை போக இவ்வாறு அலச வேண்டும்

  4. 4

    தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு ஏதேனும் ஒரு கனமான பொருளை பன்னீர் உள்ள துணி மிது வைக்கவும்.4-6 மணி நேரம் கழித்து எடுக்கவும்

  5. 5

    6 மணி நேரம் கழித்து எடுத்தால் பன்னீர் தயாராக இருக்கும்.

  6. 6

    தயார் செய்த பன்னீரை நன்றாக உள்ளங்கை வைத்து குறைந்தது 10 நிமிடம் திரட்டி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்

  7. 7

    மாவு மாதிரி வந்த பிறகு சிறிய அளவிலான உருண்டைகளாக உருட்டி பின் மெதுவாக தட்டை வடிவில் செய்து கொள்ளவும்

  8. 8

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 1/4 கப் சீனி சேர்த்து கொதிக்க விடவும்

  9. 9

    தட்டையாக செய்த பன்னீரை கொதிக்கும் தண்ணீரில் மெதுவாக போட்டு மூடி வைத்து10 நிமிடம் வேக விடவும்

  10. 10

    10 நிமிடம் கழித்து ரசமலாய் நன்றாக வெந்து நாம் போட்ட அளவை போல் இரண்டு மடங்காக இருக்கும்

  11. 11

    ஒவ்வொரு பன்னீர் துண்டுகளையும் எடுத்து இரண்டு தட்டையான கரண்டிகளுக்கு இடையே வைத்து அழுத்தி அதில் உள்ள தண்ணீரை ஒரளவு பிழிந்து கொள்ளவும்.பன்னீர் துண்டுகளை உடைத்து விடாமல் பிழியவும்

  12. 12

    1லிட்டர் பாலை நன்றாக சுண்ட காய்ச்சி கொள்ளவும்.ஆடை வர வர அதை ஒரமாக ஒதுக்கி கொண்டே வரவும்

  13. 13

    பால் சுண்டிய பின் ஏலக்காய் பொடி மற்றும் தேவையான அளவு சீனி சேர்த்து கரையும் வரை கிளறி விடவும். பின் அடுப்பை அணைத்து விடவும்

  14. 14

    காய்ச்சி ஆரவைத்த பாலில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்றாக ஊற விடவும்.

  15. 15

    குளிர் சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.ஆரோக்கியமான ரசமலாய் தயார். குங்கும பூ கொண்டு அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes