காளான் பிரியாணி (kaalan BIriyani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் புதினா கொத்துமல்லி இலைகள் மற்றும் தக்காளி இவைகளை கலந்து வைத்துக் கொள்ளவும் இவை 15 நிமிடம் நன்கு ஊற வேண்டும்.
- 2
காளான்களை தேவையான அளவில் வெட்டிக்கொண்டு அதனை சுடுதண்ணீரில் உப்பு சேர்த்து மூன்று நிமிடம் ஊறவைக்கவும் பிறகு நன்கு கழுவி தண்ணீரைப் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
குக்கரில் நெய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து அதில் தாளிக்க தேவையான பொருட்களான பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை மற்றும் முந்திரி பருப்பு இவைகளை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை வதக்கவும், கலந்து வைத்துள்ள புதினா கொத்தமல்லி தக்காளி கலவையை சேர்த்து கிளறவும்
- 4
வெங்காயம் தக்காளி புதினா கொத்தமல்லி ஒரு அளவு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை நீங்கியவுடன் ஒன்றன்பின் ஒன்றாக மிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் கரம் மசாலா தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- 5
இப்பொழுது கழுவி நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் இப்பொழுது நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மெதுவாக கிளறி விட்டு தேவையான அளவு எலுமிச்சம் சாறு பிழிந்து குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தவுடன் நிறுத்தவும். விசில் சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்து மிகவும் மெதுவாக சாதம் உடையாமல் கிளறவும்.
- 6
இப்பொழுது அருமையான அன்பு கலந்த சுவையான காளான் பிரியாணி தயார்😋😋😋
- 7
குறிப்பு: தேவைப்பட்டால் மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காளானை கழுவும் பொழுது சிறிது உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து சுடு தண்ணீரில் கழுவிக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)
#nutrient2 #book Renukabala -
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
-
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
More Recipes
- வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
- கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)
- நவரத்ன புலாவ் (navaratna pulav recipe in Tamil)
- பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
- ஜாப்பனீஸ் ஸ்டைல் சுஷி ஆம்லெட்(Japanese style susi omlet recipe in Tamil)
கமெண்ட்