எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. மட்டன் அரை கிலோ
  2. சிறியவெங்காயம் 15
  3. பூண்டு ஒன்று
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. தேங்காய் துருவியது ஒரு கப்
  6. பட்டை, கிராம்பு சிறிதளவு
  7. சீரகம் மிளகு ;ஒரு ஸ்பூன்
  8. கொத்தமல்லி; 4 ஸ்பூன்
  9. சோம்பு ஒரு ஸ்பூன்
  10. கசகசா அரை ஸ்பூன்
  11. அரிசி ஒரு ஸ்பூன்
  12. கருவேப்பிள்ளை; சிறிதளவு
  13. வரை மிளகாய் 10
  14. எண்ணெய்; தேவைக்கேற்ப
  15. தக்காளி 1
  16. பெரிய வெங்காயம் 2
  17. பச்சை மிளகாய் 3

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம் பூண்டு இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் மிளகு கொத்தமல்லி கசகசா சோம்பு வரமிளகாய் அரிசி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.வறுத்த மசாலா மற்றும் வெங்காயம் பூண்டு வதக்கி இதை சேர்த்து கிரைண்டரில் நன்கு ஆட்டி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு மட்டன் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். போ மட்டனில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.பிறகு ஆடிய மசாலாவை எடுத்து ஊற்றி வேண்டிய அளவு தண்ணீர் மற்றும் மட்டனை நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  3. 3

    மட்டன் குழம்பு நன்றாக வெந்த பிறகு மட்டன் துண்டுகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு தனியாக எடுத்து வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.இது இட்லி மற்றும் மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Archana R
Archana R @cook_20701604
அன்று

Similar Recipes