பனங்கிழங்கு பர்பி (Panankilangu barfi recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

#அன்பு
#book

பனங்கிழங்கு பர்பி (Panankilangu barfi recipe in tamil)

#அன்பு
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
7 பரிமாறுவது
  1. 6 வேகவைத்த பனங்கிழங்கு
  2. 1/4கப் தண்ணீர்
  3. 1 கப் சர்க்கரை
  4. 2 ஏலக்காய்
  5. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  6. 1 டேபிள் ஸ்பூன் துருவிய பிஸ்தா பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக  கீரிஸ் செய்து வைக்கவும்.

  2. 2

    வேக வைத்த பனங்கிழங்கின் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

  3. 3

    பின்பு மிக்ஸி ஜாரில் ஏலக்காயுடன் சேர்த்து ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும்(துருவிய தேங்காய் பதம்)

  4. 4

    ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு துருவலை மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    அதன் பிறகு சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  6. 6

    பனங்கிழங்கு துருவல் சர்க்கரையுடன் நன்றாக கலந்து கெட்டியாக மாறும் வரை வதக்கவும்.

  7. 7

    இறுதியாக மீதமுள்ள நெய் சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் நன்கு வதக்கி பின்பு நெய் தடவிய தட்டில் பரப்பி வைக்கவும்.

  8. 8

    பின்பு துருவிய பிஸ்தா பருப்பை தூவி விட்டு, விருப்பமான வடிவில் வெட்டி எடுக்கவும்.

  9. 9

    சுவையான பனங்கிழங்கு பர்பி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes