மணத்தக்காளி வத்தக் குழம்பு

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .
மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் மணத்தக்காளி வத்தல்
  2. 1/4 கப் சுண்டைக்காய் வத்தல்
  3. 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  4. 1/2டீஸ்பூன் கடுகு
  5. 1/2டீஸ்பூன் வெந்தயம்
  6. கறிவேப்பிலை
  7. 10 சின்ன வெங்காயம்
  8. 10 பல் பூண்டு
  9. 1 தக்காளி
  10. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1டேபிள்ஸ்பூன் தனியாத்தூள்
  12. 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. புளி கரைச்சல் (எலுமிச்சை அளவு)
  15. 2டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுது சிறிதளவு/ வெள்ளம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மணத்தக்காளி மற்றும் சுண்டக்கா வற்றலை நன்கு அலம்பி, கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    மண் சட்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,கடுகு,வெந்தயம்,காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் & பூண்டு பொன்னிறமாக வதக்கி, பின்பு அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின்பு அதில் சிவப்பு மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1.5 கப் தண்ணீர் மற்றும் புளிக் கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  4. 4

    நன்கு கொதித்து, குழம்பு சிறிது சுண்டியவுடன் அதில் வறுத்த வத்தல் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுதையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். சுவையான வத்தக் குழம்பு ரெடி.(

  5. 5

    இதில் தேங்காய் சேர்க்காமல் சிறிது வெல்லம் சேர்த்து செய்தாள் இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.சுவை கூடும்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அசத்தல் புவனா... எனக்கு ரொம்ப பிடிக்கும்

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes