தேவையான பொருட்கள்

  1. ராகி மாவு 1/2 கிலோ
  2. பெரியவெங்காயம் 3
  3. கடலை 1 கப்
  4. கடலை முத்து 1 கப்
  5. கருவேப்பிலை
  6. கொத்தமல்லி இலை
  7. உப்பு
  8. சமையல் சோடா உப்பு
  9. கடலை எண்ணெய்
  10. மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம்,கொத்தமல்லி இலை,கருவேப்பிலை,அரை கப் கடலை,கடலை முத்து பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்,மீதமிருக்கும் கடலை, கடலை முத்துவை அப்படியே சேர்த்துக் கொள்ளவும்,சிறிதளவு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளவும், தேவையான அளவு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் பிசைந்து கொள்ளவும். மாவு உருண்டை பிடித்து அதை உதிர்த்தும் பதத்தில் இருக்க வேண்டும்.

  2. 2

    இப்போது மாவை சிறிய சிறிய தட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான தட்டுவடைகள் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavithra
Pavithra @cook_21149120
அன்று

Similar Recipes