வெஜ் சீஸ் பாஸ்தா #book

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஐந்து பேருக்கு
  1. பாஸ்தா 200 கிராம்
  2. மைதா ஒரு டேபிள்ஸ்பூன்
  3. வெண்ணை ஒரு டேபிள்ஸ்பூன்
  4. பால் ஒரு கப்
  5. கேரட் ஒரு கப்
  6. குடைமிளகாய் ஒரு கப்
  7. வெங்காயத்தாள் அரை கப்
  8. பெரிய வெங்காயம் ஒன்று
  9. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  10. சீஸ் நாலு ஸ்லீசஸ்
  11. நெய் ஒரு ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் பாஸ்தாவை தண்ணீர் கொதிக்க வைத்து அதில் உப்பு சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் அதனை வடித்து குளிர்ந்த நீர் ஊற்றி ஆறவிடவும்.

  2. 2

    ஒயிட் சாஸ் செய்ய பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சிறிது மைதா மாவு சேர்த்து மிதமாக வறுக்கவும். பின்னர் அதில் பால் ஊற்றி கெட்டியாகவும், அதில் சீஸ் ஸ்லைஸ்களை போட்டு சாஸ்செய்யவும்.

  3. 3

    மற்றொரு பேனில், நெய் சேர்த்து அனைத்து காய்கறிகளையும் மிதமாக வதக்கவும், உப்பு சேர்க்கவும்.

  4. 4

    ஒயிட் சாஸ் கலவையில், வேக வைத்த பாஸ்தா, வதக்கிய காய்கறிகள், ஒன்று சேர்த்து கலக்கவும், மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes