சிக்கன் வறுவல்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#lockdown
வீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கிலோ சிக்கன்
  2. 1கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 4பச்சை மிளகாய்
  6. உப்பு தேவையான அளவு
  7. 6டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 1பிரியாணி இலை
  10. கறிவேப்பிலை சிறிது
  11. கொத்தமல்லி தழை சிறிது
  12. வறுத்து பொடித்த:
  13. 2டேபிள்ஸ்பூன் தனியா விதை
  14. 2ஸ்பூன் சீரகம்
  15. 15குருமிளகு
  16. 6வரமிளகாய்
  17. 4பட்டை
  18. 4கிராம்பு
  19. 2ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் ஐ சுத்தம் செய்து அலசி வைக்கவும்

  2. 2

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி வைக்கவும்

  3. 3

    வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும் (கடையில இப்போது தூள் வகைகள் கிடைப்பதில்லை அதனால் இந்த முயற்சி நன்றாக இருந்தது)

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு பிரியாணி இலை போடவும்

  5. 5

    பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் தக்காளி மற்றும் வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு வதக்கவும்

  8. 8

    பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் ஐ சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும்

  9. 9

    பின் மூடி வைத்து வேக வைக்கவும்

  10. 10

    சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி சுருள கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes