சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மாவை 8மணி நேரம் ஊற வைத்து பின்னர் ராஜ்மாவை குக்கரில் போதுமான அளவு நீர் சேர்த்து (ராஜ்மா மூழ்கும் வரை)1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் குக்கரில் 3ஸ்பூன் நெய் (அல்லது 1ஸ்பூன் நெய் 2ஸ்பூன் எண்ணெய்) எடுத்து சூடானதும் பட்டை, லவங்கம், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்த உடன் நீள வாக்கில் வெட்டி உள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1நிமிடம் வதக்கி பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புலாவ்க்கு தேவையான உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து கலந்து கொண்டு வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து (தண்ணீர் இல்லாமல்)மசாலா உடன் நன்றாக கலந்து கொள்ளவும் பின்னர் எலுமிச்சை சாறை சேர்த்து பின் நறுக்கிய கொத்த மல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
இப்பொது ராஜ்மா வேக வைத்த தண்ணீர் மற்றும் சாதாரண தண்ணீர் இரண்டும் சேர்த்து 1 கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் என அளந்து மசாலாவில் ஊற்றவும். கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து உப்பு, காரம் சரி பார்த்து குக்கரை மூடி 2விசில் வரும் வரை (அவரவர் குக்கரை பொறுத்து 2அல்லது 3விசில்) வைத்து பின் அடுப்பை அனைத்து 10நிமிடம் கழித்து குக்கரை திறந்து ரைத்தாவுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புரோக்கோலி,ராஜ்மா & வெஜ் புலாவ்
புரோக்கோலியில் விட்டமன் டி சத்து அதிகமாக உள்ளது, ராஜ்மாவில் கேன்சர் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. புரோக்கோலி சாப்பிடுவதின் பயன்கள்: கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், கண்பார்வை அதிகரிக்கவும், எலும்புகள் வலுவடையவும் செய்கிறது. Jaleela Kamal -
-
-
-
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்Durga
-
-
-
-
-
-
-
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
-
-
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
தேங்காய்ப்பால், பட்டாணி புலாவ் (Coconut milk, peas pulao recipe in tamil)
#GA4 ( week - 19) selva malathi -
கொண்டைக்கடலை சாதம் | Channa Pulav (Kondakadalai satham recipe in
வீட்டில் காய்கறி இல்லாத சமயங்களில் சுலபமாகவும் ருசியாகவும் செய்யக்கூடிய எளிமையான உணவு. Corona lock down சமயங்களில் நான் அதிகம் என் வீட்டில் சமைத்த உணவு இது. #ranjanishomeதேவி
-
-
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்