பசலை கீரை கொண்டைக்கடலை கெபாப்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#immunity #book பசலை கீரையில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆக்ட்டிவிட்டி அதிகமாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கீரை பிடிக்காத குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
4 பரிமாறுவது
  1. வேக வைத்த கொண்டைக்கடலை -100கிராம்
  2. பசலை கீரை-12 இலைகள்
  3. வெங்காயம் நறுக்கியது-1
  4. அரிசி மாவு -2டே.ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் -2
  6. காய தூள் -1/4டீ ஸ்பூன்
  7. கர மசாலா தூள் -1/2டீ ஸ்பூன்
  8. எண்ணெய் -தேவைக்கேற்ப
  9. உப்பு -தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    வேக வைத்த கொண்டைக்கடலையே மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.பசலை கீரையை எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.

  2. 2

    அரைத்த கொண்டைக்கடலை உடன் வதக்கி கீரை சேர்த்து,கூடவே பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்க்கவும்.

  3. 3

    பின்பு அரிசி மாவு,உப்பு,கர மசாலா பொடி சேர்க்கவும்.

  4. 4

    அத்துடன் காய பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    படத்தில் காண்பித்து இருப்பது போல உருட்டி இப்படி ஸ்டிக்கில் வைத்துகொள்ளவும்.

  6. 6

    ஸ்டிக் இல்லை என்றால் டிக்கி மாதிரி தட்டி வைத்து கொள்ளலாம்.

  7. 7

    கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் காய்ந்ததும் செய்து வைத்து இருக்கும் கெபாப்பை போட்டு எடுக்கவும்.ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் மாத்தி போடவும்.

  8. 8

    ஆரோக்கியமான பசலை கீரை கொண்டைக்கடலை கெபாப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes