வாவல் மீன் வறவல்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#எதிர்ப்பு சக்தி.
#book
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய கண்கள் மற்றும் தலைமுடியை காக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு மீன் ஆகும் இதை நாம் சமைத்து சாப்பிடுவதால் நம் உடலிற்கு எந்தவிதமான கெடுதலும் கிடையாது ஆனால் மற்ற அசைவ உணவுகளில் ஏதேனும் நமக்கு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு .ஆனால் மீன் சாப்பிடுவதால் உடல் வலுபெறும் கண்கள் நன்றாக தெரியும் முடி உதிர்வு குறையும் எனவே இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நபருக்கு
  1. கால்கிலோ வாவல் மீன்
  2. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. பூண்டு 5 பல்
  4. சின்ன வெங்காயம் 2
  5. சோம்பு ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு
  7. எண்ணை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அலசி பிழிந்து எடுக்கவும்

  2. 2

    பூண்டு வெங்காயம் மிளகாய்த்தூள் உப்பு சோம்பு ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

  3. 3

    இப்போது மீனில் இந்த மசாலாவை நன்கு கலந்து ஒரு மணி நேரம் வெயிலில் அல்லது ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.

  4. 4

    இப்பொழுது ஒரு தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு வெந்ததும் மறுபுறம் பிரட்டி எடுக்கவும் சுவையான சூப்பரான வாவல் மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes