சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் மற்றும் பூண்டை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின் தக்காளி மற்றும் புளியை தண்ணீர் அதிகம் விடாமல் நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அந்த புளித்தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சீரகத்தூள், மஞ்சள்தூள் மற்றும் பாதி வெங்காயம் பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அதன் பின் மீதி உள்ள வெங்காய பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதன்பின் ஒரு தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனையும் சேர்த்து தக்காளி கரையும்வரை வதக்கி கொள்ளவும்.தக்காளி கரைந்தவுடன் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து உடனே ஒரு தட்டு போட்டு மூடிவிடவும்.
- 3
குழம்பு கொதித்து நன்றாக எண்ணெய் பிரிந்து கெட்டியான பதம் வந்ததும் கழுவி வைத்துள்ள மீனை சேர்த்து பத்து நிமிடம் மிதமான சூட்டில் வேகவைக்கவும். இடையிடையே கரண்டி போடாமல் பாத்திரத்தைக் குலுக்கி விடவும். இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
- 4
குறிப்பு:-நீங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் மற்றும் புளிப்புக்கு ஏற்ப புளியையும் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம். தேங்காய் சேர்க்காததால் இரண்டு நாள் வைத்தாலும் குழம்பு கெடாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
-
More Recipes
கமெண்ட்