குடமிளகாய் சாதம்😋

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#immunity #book
குடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. ஒரு கப் பாஸ்மதி அல்லது சீரக சம்பா அரிசி
  2. ஒரு குடை மிளகாய்
  3. ஒரு பெரிய வெங்காயம்
  4. இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை
  5. ஒரு ஸ்பூன் வர கொத்தமல்லி
  6. அரை ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  8. அரை ஸ்பூன் சீரகம்
  9. ஒரு ஸ்பூன் எள்ளு
  10. நான்கு வரமிளகாய்
  11. அரை ஸ்பூன் மஞ்சள்
  12. அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  13. உப்பு அவரவர் தேவைக்கேற்ப
  14. தாளிக்க
  15. ரெண்டு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்
  16. அரை ஸ்பூன் கடுகு
  17. கறிவேப்பிலை கொஞ்சம்
  18. ரெண்டு ஸ்பூன்பொடியாக அறிந்த கொத்தமல்லித் தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை அல்லது சீரகசம்பா அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் சன்னமாக அறிந்துகொள்ளவும். அதேபோல் குடை மிளகாயையும் நீளமாக சங்கமாக அறிந்து கொள்ளவும். 15 நிமிடம் ஊறிய அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் வேர்கடலை, ஒரு ஸ்பூன் வரக்கொத்தமல்லி, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் எள்ளு, 4 வரமிளகாய் எண்ணெய் சேர்க்காமல் நன்கு வாசம் வரும் வரை சிவக்க வறுத்துக்கொள்ளவும். இவற்றை நன்கு ஆற விடவும்.ஆறிய பிறகு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மீண்டும் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, காய்ந்தவுடன் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விட்ட பிறகு கருவேப்பிலை சேர்க்கவும்.அதன் பிறகு நீளவாக்கில் அரிந்த ஒரு பெரிய வெங்காயத்தை நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். அதன் பிறகு நீளவாக்கில் அரிந்த குடமிளகாயை அதில் சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடத்தில் குடமிளகாய் தோல் லேசாக சுருங்க தொடங்கும்.

  4. 4

    அப்போது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் கரகரப்பாக அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். இவற்றுடன் உதிரியாக வடித்த சாதத்தை உடையாமல் கிளறிவிட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு மூடவும். 5 நிமிடம் கழித்து அறிந்து வைத்த கொத்தமல்லித்தழையை சேர்த்து சாதத்தை நன்கு கலக்கவும்.

  5. 5

    சூடான, சுவையான, சத்தான, குடமிளகாய் சாதம் தயார். தொட்டுக்கொள்ள அப்பளம், வடகம் ஏதாவது ஒன்றை தயார் செய்து கொள்ளவும். இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். பள்ளி அலுவலகத்திற்கு ஏற்ற லஞ்ச் பாக்ஸ்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes