செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Carrot
#Book
தினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45mins
2 பரிமாறுவது
  1. 1 கப் பாசுமதி அரிசி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 கேரட்
  4. 8 பீன்ஸ்
  5. 1 உருளைக் கிழங்கு
  6. 2 பல் பூண்டு
  7. 1 துண்டு இஞ்சி
  8. 2 பச்சை மிளகாய்
  9. 1 பிரிஞ்சி இலை
  10. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. மசாலா பொடி அரைக்க
  13. 2 கிராம்பு
  14. 1 இன்ச் பட்டை
  15. 1டீஸ்பூன் மிளகு
  16. 1டீஸ்பூன் சோம்பு
  17. 1டீஸ்பூன் தனியா
  18. அலங்கரிக்க
  19. 1/4 கப் பச்சை பட்டாணி
  20. 1/4 கப் புதினா இலை
  21. தாளிக்க
  22. 2 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45mins
  1. 1

    கேரட் 2 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கு 1 தோல் நீக்கி கழுவி நறுக்கி தண்ணீரில் வேக விட்டு எடுத்து வைக்கவும்.பீன்ஸ் 8 கழுவி நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.பாசுமதி அரிசி 1 கப் கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.புதினா கழுவி எடுத்து வைக்கவும்.

  2. 2

    பச்சை பட்டாணி 1/4 கப் கழுவி வேக வைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.அரைக்க தனியா 1 டீஸ்பூன்,மிளகு 1 டீஸ்பூன், கிராம்பு 2,பட்டை 1 துண்டு,சோம்பு 1 டீஸ்பூன் எடுத்து வெறும் கடாயில் வறுத்து ஆறவிடவும்.

  3. 3

    ஆறவிட்டதை மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைக்கவும். மசாலா பொடி ரெடி.இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,பிரிஞ்சி இலை 1 எடுத்து வைக்கவும்.குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து,

  4. 4

    நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கி நறுக்கிய கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பிரிஞ்சி இலை சேர்த்து,மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்.

  5. 5

    அரைத்த மசாலா பொடி சேர்த்து நன்கு கலக்கி விட்டு,ஊறிய அரிசி சேர்த்து கலக்கி தண்ணீர் 2 கப் ஊற்றி குக்கரில் 3 விசில் வேக விடவும்.சுவையான செட்டிநாடு காய்கறி புலாவ் ரெடி.

  6. 6

    அலங்கரிக்க வேக வைத்த பச்சை பட்டாணி புதினா இலை களை மேலே சேர்க்கவும். சுவையான புலாவ் ரெடி.தயிர் பச்சடி செய்து தொட்டு சாப்பிடலாம்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes