கேரட் பர்பி🥕

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#carrot # book
கேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும்.

கேரட் பர்பி🥕

#carrot # book
கேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
10 துண்டுகள்
  1. நாலு கப் துருவிய கேரட்
  2. ஒரு கப் பால்
  3. அரை கப் சர்க்கரை
  4. அரை கப் பால் பவுடர்
  5. அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. ரெண்டு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு
  7. ரெண்டு ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும். நாலு கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். பால் பவுடர் அரை கப் எடுத்துக் கொள்ளவும்.4 ஏலக்காய் நுணுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏழெட்டு பாதாம் பருப்புகளை சன்னமாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    முதலில் ஒரு பெரிய வாணலியில் ரெண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சூடுபடுத்தவும். துருவிய நாலு கப் கேரட்டை சேர்த்து ஐந்து நிமிடம் லேசாக நிறம் மாறும் வரை அல்லது பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கப் பாலை அதில் சேர்க்கவும். பால் நன்கு சுண்டும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். பால் சுண்டிய பிறகு அதில் அரை கப் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் கிளற வேண்டும்.

  3. 3

    சர்க்கரை நன்கு கரைந்து மீண்டும் கேரட் கலவை கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டிருக்கவும். கெட்டியானவுடன் அரை கப் பால் பவுடரை சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். மிதமான தீயில் செய்யவும்.

  4. 4

    வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும்போது ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.

  5. 5

    பிறகு ஒரு தட்டில் பட்டர் பேப்பரை போட்டு பர்பி கலவையை அதில் எடுத்து போட்டு நன்கு நிரவி விடவும். சன்னமாக அரிந்து வைத்த பாதாம் பருப்பை பர்பி மேல் தூவி விட்டு ஒரு கரண்டியால் அதை நன்கு அழுத்தி விடவும்.

  6. 6

    அரைமணி நேரத்திற்கு மேல் நன்கு ஆறவிடவும். நன்கு ஆறிய பின் வேறு ஒரு தட்டில் கவிழ்து விட்டு மெதுவாக எடுக்கவும். மீண்டும் மேல்புரமாக திருப்பிவிட்டு கத்தி கொண்டு சரியான அளவுகளில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சுவையான கேரட் பர்ஃபி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
good. I was going topost a recipe similar to this . Takes lot of time to make, write and photograph

Similar Recipes