சோளமாவு  ஹல்வா(பாம்பே ஹல்வா)

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
Erode

சோளமாவு  ஹல்வா(பாம்பே ஹல்வா)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சோள மாவு - 100 கிராம்
  2. சர்க்கரை - 200 கிராம்
  3. ஏலக்காய்தூள்
  4. முந்திரி
  5. உலர் திராட்சை
  6. நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.. (100 கிராம் மாவுக்கு 200 எம்எல் தண்ணீர் வேண்டும். ஏனெனில் சோள மாவு சிக்கிரம் திக் ஆக கூடியது)

  2. 2

    பின்பு ஒரு கடாயில் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து அது கரையும் வரை ௧ொதிக்க விடவு‌ம் (200கிராம் க்கு 250ml தண்ணீர்).இதற்கு சர்க்கரை கம்பி பதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.. சர்க்கரை கரைந்து கொதித்தால் போதும்.. (உங்களுக்கு இனிப்பு அதிகம் பிடிக்கும் என்றால் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்..)

  3. 3

    நன்றாக சர்க்கரை கொதித்த பின் நாம் கலந்து வைத்த சோள மாவு கலவையை மறுபடியும் நன்றாக ஒரு முறை கல‌ந்து சர்க்கரை பாகில் உற்றி மெதுவாக கலக்கவும்

  4. 4

    ஊற்றிய ஒரு சில நிமிடங்களில் திரல் திரலாக மாற ஆரம்பிக்கும்.. அப்போது அடுப்பை சிம்மில் வைக்கவும்.. கை விடாது தொடர்ந்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும்..

  5. 5

    சிறிது நேரத்தில் கலவை சரியான பதத்திற்கு வர ஆரம்பிக்கும்.. அப்போது கொஞ்சம் நெய் விட்டு மீண்டும் கிளறவும்..

  6. 6

    நெய் கொஞ்சம் அதிகமாக சேர்த்து நன்கு கிளறவும்... நம்முடைய கலவை கடாயில் ஒட்டாமல் வரும்..அது தான் அல்வாவின் பதம்.. அப்போது வேறு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பொறித்து வைத்து கொள்ளவும். கடைசியில் அல்வாவில் பொறித்த கலவை சேர்த்து கிளறி விடவும்.

  7. 7

    வேறு ஒரு பாத்திரத்தில் சுற்றி நெய் தடவி கடாயில் உள்ள அல்வாவை பாத்திரத்திக்கு மாற்றவும்..

  8. 8

    சுவையான பாம்பே ஹல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
அன்று
Erode
I am happiest mother in the world
மேலும் படிக்க

Similar Recipes