புடலங்காயில் 3 in 1 ரெசிபி (காரம் மற்றும் ஸ்வீட்)

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
Erode

புடலங்காய் வை‌த்து பொதுவாக கூட்டு மற்றும் பொறியல் செய்வார்கள்..
நீர் சத்து அதிகம் உள்ள காய்கறி இது.. இ‌தி‌ல் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, கால்ஷியம் நிறைந்த உள்ளது.
இதை வித்தியாசமான முறையில் செ‌ய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. No. 1.பஜ்ஜி க்கு தே வையான பொருள்
  2. புடலங்காய்(வட்டமாக வெட்டி கொள்ளவும்)
  3. கடலை மாவு-2 கப்
  4. அரிசி மாவு-1கப்
  5. மிளகாய் தூள்
  6. உப்பு
  7. No. 2.பாயாசத்திற்கு தேவையான பொருள்
  8. புடலங்காய் (பொடிபொடியாக துருவி கொள்ளவும்)
  9. பால் - 1 கப்
  10. சர்க்கரை - 3/4 கப்
  11. முந்திரி
  12. உலர் திராட்சை
  13. ஏலக்காய்
  14. No. 3.சட்னி செய்ய தேவையான பொருள்
  15. உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்
  16. கடலை பருப்பு - 2 ஸ்பூன்
  17. காய்ந்த மிளகாய் - 3
  18. தே‌ங்கா‌ய் - சிறிதளவு
  19. கறிவேப்பிலை - ஒரு கை பிடித்து
  20. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சமைப்பதற்கு தேவையான புடலங்காயாய் சுத்தம் செய்து வைத்து தேவையான அளவு வெட்டி எடுத்து கொள்ளவும்..கொஞ்சம் அதிகமான பிராசஸ் இருக்கும்.. ஆனா easyah இருக்கும்..ஆர்டர் மாறி மாறி வரும்😋

  2. 2

    சட்னி செய்ய மேலே சொன்ன அளவுகளில் எடுத்து நன்கு எண்ணெய் விட்டு வதக்கவும்.. பின் புடலங்காய் விதையை தனியாக கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கவும்....

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய அனைத்தையும் ஒன்றாக கலந்து அரைத்து கொள்ளவும்.. பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். சட்னி ரெடி

  4. 4

    பஜ்ஜி செய்ய புடலங்காயை வ‌ட்ட‌ வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.. மேலே குறிப்பிட்ட அளவுகளில் மாவை பஜ்ஜி‌ மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.. புடலங்காய் இல் கொஞ்சம் சோள மாவு போட்டு கலந்து வைக்கவும்.. அப்போ தான் பஜ்ஜி மாவு புடலங்காய் உடன் ஒட்டும்.. பின் நாம் எப்பவும் போல பஜ்ஜி செய்வது போல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்கவும்..

  5. 5

    சுவையான புடலங்காய் பஜ்ஜி ரெடி

  6. 6

    பாயாசம் செய்ய மேலே சொன்ன அளவுகளில் எடுத்து கொள்ளவும்.. அதோடு புடலங்காயாய் சாப்பரில் நல்ல துருவி வைத்துக் கொள்ளவும்..ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை நல்ல வறுத்து எடுத்துக் கொள்ளவும்..

  7. 7

    மீதி உள்ள நெய்யில் துருவிய புடலங்காயாய் நன்கு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.. பின் அதில் பால் உற்றி புடலங்காய் வேகும் வரை கிண்டி விடவும்.. பா‌ல் நிறம் மாறும் வரை நல்ல கொதிக்காக வைக்கவும். பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்..

  8. 8

    பின் அதில் வதக்கி வைத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்.. Yummy பாயாசம் ரெடி

  9. 9

    Finally 3 in 1 recipes ready, 👍😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
அன்று
Erode
I am happiest mother in the world
மேலும் படிக்க

Similar Recipes