எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. 2கப் +4 டேபிள்ஸ்பூன் வெல்லம்
  3. 1/4கப் பயத்தம்பருப்பு
  4. 1/4கப் கடலைப்பருப்பு
  5. 1கப் தேங்காய் துருவல்
  6. 1/8ஸ்பூன் உப்பு
  7. 9ஏலக்காய்
  8. 1/4ஸ்பூன் சுக்குத் தூள்
  9. 1/8ஸ்பூன் ஜாதிக்காய் பொடி
  10. 1-1/2கப் தண்ணீர்
  11. 4டேபிள்ஸ்பூன் நெய்
  12. 2டேபிள்ஸ்பூன் கரகரப்பாக உடைத்த நட்ஸ்
  13. 10திராட்சை

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    கொழுக்கட்டை உருண்டைகள் செய்ய:. பச்சரிசி ஐ இரண்டு முறை அலசி ஆறு மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் கழுவி மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    ஒரு நான்ஸ்டிக் பேனில் மீதமுள்ள அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 4 டேபிள்ஸ்பூன் துருவிய வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கொதித்ததும் அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து மரகரண்டியால் கிளறவும்

  4. 4

    ஏழு நிமிடங்கள் வரை கைவிடாமல் தொடர்ந்து அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கிளறவும் சிறிது நேரத்தில் பேனில் சிறிதும் ஒட்டாமல் பந்து போல் சுருண்டு வரும் போது இறக்கி ஈரத்துணி சுற்றி பதினைந்து நிமிடம் வரை வைக்கவும்

  5. 5

    கிளறிய மாவை நன்கு பிசைந்து கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  6. 6

    பின் ஆவியில் எட்டு நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்

  7. 7

    பயத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டு களைந்து மலர வேகவிட்டு எடுக்கவும்

  8. 8

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்

  9. 9

    வெல்லம் நன்கு கொதித்து ஒரு கம்பி பதம் வந்ததும் தேங்காய் துருவல் மற்றும் வேகவைத்த பயத்தம்பருப்பு கடலைப்பருப்பு ஐ சேர்த்து நன்கு கிளறவும்

  10. 10

    சற்று திக்காக வந்ததும் வேகவைத்த கொழுக்கட்டை உருண்டைகளை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கிளறவும் நன்கு எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும்

  11. 11

    வாணலியில் நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த நட்ஸ் சேர்த்து வறுத்து திராட்சை சேர்த்து வறுத்து கொட்டவும்

  12. 12

    சுவையான ஆரோக்கியமான அம்மனி கொழுக்கட்டை ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes