கேரமெல் ஆப்பிள் கஸ்டர்டு புடிங் (Caramel apple custard pudding Recipe in Tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

இன்று அன்னையர் தினம் என்பதால் அம்மாவிற்காக இது செய்தேன் என் அம்மாவிற்கு ஆப்பிள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் புதிய முறையாக ஆப்பிள் புட்டிங் செய்துள்ளேன். #அம்மா #book

கேரமெல் ஆப்பிள் கஸ்டர்டு புடிங் (Caramel apple custard pudding Recipe in Tamil)

இன்று அன்னையர் தினம் என்பதால் அம்மாவிற்காக இது செய்தேன் என் அம்மாவிற்கு ஆப்பிள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் புதிய முறையாக ஆப்பிள் புட்டிங் செய்துள்ளேன். #அம்மா #book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
  1. 2 கப் பால்
  2. 1/2 கப் வேகவைத்த ஆப்பிள்
  3. 11/2டேபிள் ஸ்பூன் கஸ்டார்ட் பவுடர்
  4. 1 கப் சக்கரை
  5. 3மில்க் ப்ரெட்
  6. 2டேபிள் ஸ்பூன் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தை எடுத்து 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் 1/2cup சர்க்கரை சேர்த்து கேரமல் ஆகும் வரை விடவும். காரமெல் ஒரு மோல்டில் ஊற்றவும். 5 நிமிடம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

  2. 2

    இன்னொரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை ஒரு டேபிள் டீஸ்பூன் தண்ணீரில் நன்றாகக் கலந்து கொள்ளவும். பிரெட்டை ஓரம் கட் செய்துவிட்டு மற்றதை மிக்சியில் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும் வேகவைத்த ஆப்பிளையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சவும், கொதி வந்தவுடன் அதில் ஒரு கப் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் கஸ்டர்ட் கலவையை ஊற்றவும், கைவிடாமல் கிளறவும்.

  3. 3

    கொஞ்சம் சேர்ந்து வரும்போது ப்ரெட் மற்றும் ஆப்பிள் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும். ஒரு மோல்ட்இல் கலவையை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் அல்லது ஸ்டீம் செய்யக்கூடிய பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்த எடுக்கவும். இப்போது கேரமெல் கஸ்டர்டு புடிங் பரிமாற தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes