கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Family
#Nutrient3
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது .

கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)

#Family
#Nutrient3
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1/4கப் உளுந்து மாவு
  2. 1கப் கேழ்வரகு மாவு
  3. உப்பு
  4. தாளிக்க
  5. 3டீஸ்பூன் ஆயில்
  6. 1/2டீஸ்பூன் கடுகு
  7. 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  8. 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  9. 1பெரிய வெங்காயம்
  10. 1பச்சை மிளகாய்
  11. பெருங்காயம்
  12. கறிவேப்பிலை
  13. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    இட்லி மாவு அரைக்கும் பொழுது 1/4 கப் உளுந்து ஊறவிட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.1 கப் கேழ்வரகு மாவு சலித்து வைக்கவும்.

  2. 2

    அரைத்த உளுந்து மாவை கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 கழுவி விதை நீக்கி வைக்கவும்.கறிவேப்பிலை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

  3. 3

    கடாயில் ஆயில் 3 டீஸ்பூன் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன், கடலை பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதை கலக்கிய கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும்.கலக்கி விட்டு 3 மணி நேரம் கழித்து தோசை சுடவும்.இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சிவந்தவுடன் எடுக்கவும்.

  5. 5

    சுவையான கேழ்வரகு தோசை ரெடி.தக்காளி சட்னி, பொட்டுக்கடலை சட்னி செய்து பரிமாறவும்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes