சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#family
#nutrient3
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)

#family
#nutrient3
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 நபர்
  1. ஒரு வாழைப்பூ
  2. 50 கிராம் கடலைப்பருப்பு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  5. 1 டீஸ்பூன் சோம்பு
  6. இரண்டு காய்ந்த மிளகாய்
  7. 1 பல் பூண்டு
  8. கருவேப்பிலை இலைகள்
  9. கொத்தமல்லி இலைகள்
  10. தேவையானஅளவு எண்ணெய், உப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு வாழைப்பூவை ஆய்ந்து நன்றாக அரைக்கவும்.

  2. 2

    பின்னர் 50கிராம் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் 2 காய்ந்த மிளகாய், 1 பல் பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

  3. 3

    அரைத்த வாழைப்பூ, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 1 பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் சோம்பு, 1/4 டீஸ்பூன் பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூடான வாழைப்பூ வடை சுவைக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes