செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#eid
இன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. 1/2 கிலோ இறால்
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  9. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  10. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  11. கொத்தமல்லி இலைகள்
  12. தேவையானஅளவு உப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். 2 நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.

  3. 3

    அடுத்ததாக 1/2 கிலோ இறால் துண்டுகளை சேர்க்கவும். இறாலில் இருந்து தண்ணீர் முழுவதுமாக வந்து நன்கு வேகும் வரை காத்திருக்கவும்.

  4. 4

    கடைசியாக மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுப்பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் இதமான சூட்டில் விடவும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை ஆப் செய்யவும். சுவையான செட்டிநாடு இறால் கிரேவி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (2)

Top Search in

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes