ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#ஈத் ஸ்பெஷல்

ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)

#ஈத் ஸ்பெஷல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேர்க்கு
  1. மட்டன் பிரியாணி
  2. தேவையானவை
  3. ஒரு கிலோமட்டன்
  4. முக்கால் கிலோஜீரக சம்பா
  5. 250 கிராம்இஞ்சி பூண்டு விழுது
  6. 200 மிலிஎண்ணெய்
  7. 50 மிலிநெய்
  8. தலா 5பட்டை கிராம்பு ஏலம்
  9. கால் கிலோதக்காளி
  10. கால் கிலோபெ.வெங்காயம்
  11. தே.அளவுஉப்பு
  12. ஒரு கப்புதினா
  13. ஒரு கப்மல்லி
  14. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  15. 5ப.மிளகாய்
  16. ரவா லட்டு
  17. தேவையானவை
  18. இரண்டு கப்ரவை
  19. அரை கப்பால்
  20. ஒன்றரை கப்சர்க்கரை
  21. கால் கப்நெய்
  22. சிறிதுமுந்திரி
  23. வட்டிலப்பம்(முட்டை புட்டிங்
  24. 10முட்டை
  25. இரண்டு கப்தேங்காய் பால்
  26. 250 கிராம்சர்க்கரை
  27. கால் கப்நெய்
  28. சிறிதுமுந்திரி திராட்சை
  29. தேவையானவை
  30. நான்குஏலக்காய்
  31. மில்க் மெய்ட் கேசரி
  32. தேவையானவை
  33. ஒரு கப்வெர்மிசிலி சேமியா
  34. அரை கப்மில்க் மெய்ட்
  35. ஒரு கப்பால்
  36. ஒரு கப்சர்க்கரை
  37. கால் கப்நெய்
  38. சிறிதுமுந்திரி திராட்சை
  39. மூன்றுஏலக்காய்
  40. எலும்பு தாள்ச்சா
  41. தேவையானவை
  42. கால் கிலோமட்டன் எலும்பு
  43. அரை கப்துவரம் பருப்பு
  44. கால் கப்கடலைப்பருப்பு
  45. இரண்டுபெ.வெங்காயம்
  46. இரண்டுதக்காளி
  47. ஒன்றுமாங்காய்
  48. கால் கிலோகத்தரிக்காய்
  49. தே.அளவுஉப்பு
  50. இரண்டு டே.ஸ்பூன்மல்லித்தூள்
  51. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  52. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  53. அரை கப்புதினா மல்லி இலை
  54. கால் கப் எண்ணெய்
  55. வெங்காய பச்சடி
  56. தேவையானவை
  57. மூன்றுபெ.வெங்காயம்
  58. நான்குப.மிளகாய்
  59. ஒரு கப்தயிர்
  60. தே.அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மட்டன் பிரியாணி செய்முறை..குக்கரில் நெய்.எண்ணெய் கலந்து ஊற்றவும்.

  2. 2

    அதில் பட்டை கிராம்பு ஏவம் தாளித்து புதினா மல்லி இலைகள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதிலேயே அரிந்த வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதில் ப.மிளகாய்.இஞ்சி பூண்டு விழுது.உப்பு.மி.தூள் சேர்த்து பச்சை வாசனை போகவதக்கவும்.

  5. 5

    எண்ணெய் பிரிந்ததும் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து வேக விடவும்

  6. 6

    அதில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வுதம் நான்கரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  7. 7

    அதில் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து வேக விட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

  8. 8

    ரவா லட்டு செய்முறை. ரவையை கடாயில் சிறிதூ நெய் சேர்த்து நிறம் மாறாமல் வறுக்கவும்

  9. 9

    சர்க்கரையை மிக்சியில் இட்டு பொடிக்கவும்.மீதமுள்ள நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து வைக்கவும்.

  10. 10

    ரவை மிதமான சூட்டில் இருக்கும் போதே பொடித்த சர்க்கரை சேர்த்து அதில் நெய்யடன் முந்திரி கலவையை கொட்டி புரட்டவும்

  11. 11

    அடுப்பை அணைத்து சிறிது சிறிதா பால் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

  12. 12

    வட்டிலப்பம் செய்முறை. பத்து முட்டைகளை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் சர்க்கரை சேர்த்து அடித்து கலக்கவும்

  13. 13

    அதில் நெய்.ஏலக்காய் பொடித்து சேர்க்கவும்.அதை ஒரு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதனுள்ளே வைத்து மூடி ஒரு மணி நேரம் வேக விடவும்.

  14. 14

    நன்கு வெந்ததும் முந்திரி திராட்சை வறுத்து அலங்கரிக்கவும்

  15. 15

    தாள்ச்சா செய்முறை.ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்

  16. 16

    அதில் இஞ்சி பூண்டு விழுது உப்பு மி.தூள் ம.தூள் சேர்த்து வதக்கி மட்டன் எலும்பு சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும்.

  17. 17

    பருப்பு. எலும்பு வெந்ததும் அதில் கத்தரிக்காய். மாங்காய்.புதினா மல்லி சேர்து திறந்த நிலையிலே வேக விடவும்.

  18. 18

    கடைசியாக புதினா மல்லி இலை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

  19. 19

    மில்க் மெய்ட் கேசரி செய்முறை. ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு ஒரு கப் சேமியாவை வறுக்கவும்.

  20. 20

    அதில் பால் ஒரு கப் தண்ணீர் அரை கப் சேர்த்து வேக விடவும்.

  21. 21

    நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறி கெட்டியானதும் மில்க் மெய்ட் அரை கப் சேர்த்து ஏலப்பொடி சேர்த்து கிளறி நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

  22. 22

    வெங்காய பச்சடி செய்முறை. பெ.வெங்காயம் மற்றும் ப.மிளகாயை மெலிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான உப்பு தயிர் சேர்த்து கலந்து வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes