காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1/2பாதி சுரைக்காய்
  2. 1கப் வறுத்த வேர்க்கடலை
  3. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. உப்பு
  6. 8பல் ண்டு
  7. 8சின்ன வெங்காயம்
  8. தாளிக்க
  9. 3டீஸ்பூன் ஆயில்
  10. 1 டீஸ்பூன் கடுகு
  11. 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  12. 1வரமிளகாய்
  13. சிறிதுபெருங்காயம்
  14. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    பாதி சுரைக்காயை கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு 8 பல் தோல் நீக்கி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயம் 8 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும். வறுத்த வேர்க்கடலை தோல் நீக்கி புடைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் 3 டீஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் வரமிளகாய் 1 கிள்ளியது கறிவேப்பிலை சிறிது சேர்த்து தாளித்து, பூண்டு 8 பல் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,நறுக்கிய சுரைக்காயை சேர்த்து மஞ்சள் தூள்1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.

  3. 3

    உப்பு,மிளகாய் தூள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் 1 கப் ஊற்றி வேக விடவும்.

  4. 4

    வெந்தவுடன் அரைத்து வைத்த வேர்க்கடலை பொடியை சேர்த்து கலக்கவும்.தேவை என்றால் தண்ணீர் சேர்க்கவும்.

  5. 5

    காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு ரெடி.சாதத்திற்கு ஏற்றது.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes