ரோட் சைடு ஸ்பைசி காளான் (Road side spicy kaalaan recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

ரோட் சைடு ஸ்பைசி காளான் (Road side spicy kaalaan recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200கிராம் முட்டைகோஸ்
  2. 250கிராம் காளான்
  3. 1கப் மைதா மாவு
  4. 1/4கப் சோள மாவு
  5. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1ஸ்பூன் கரம் மசாலா
  7. உப்பு தேவைக்கு
  8. எண்ணெய் தேவைக்கு
  9. 2 பெரிய வெங்காயம்
  10. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 2பச்சை மிளகாய்
  12. கருவேப்பிலை சிறிது
  13. 3தக்காளி
  14. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 1/2ஸ்பூன் கரம் மசாலா
  16. 1ஸ்பூன் மல்லித்தூள்
  17. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  18. கொத்த மல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முட்டைக்கோஸ் மற்றும் காளான் இரண்டையும் பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி வடிக்கட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் 1கப் மைதா மாவு, 1/4 கப் சோள மாவு, 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1ஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் சிறு சிறு உருண்டையாக எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் அரைத்து எடுத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், 1/2ஸ்பூன் கரம் மசாலா, 1ஸ்பூன் மல்லி தூள் 2ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் 1ஸ்பூன் சோள மாவை 1/4டம்ளர் தண்ணீரில் கரைத்து மசாலாவில் சேர்க்கவும். பின்னர் பொரித்து எடுத்த காளான் வறுவலை சேர்த்து பிரட்டவும். 5நிமிடம் வேக விடவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பச்சை வெங்காயம் தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes