பீஃப் ரோஸ்ட் (Beef roast recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

பீஃப் ரோஸ்ட் (Beef roast recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 கிலோ சிறிய துண்டுகளாக வெட்டிய பீப்
  1. 1 கப் சின்ன வெங்காயம்
  2. 1 கப்பெரிய வெங்காயம் (நறுக்கியது)
  3. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 3பச்சை மிளகாய் நறுக்கியது
  5. தேவைக்கு கறிவேப்பிலை
  6. 1 கப் தக்காளி நறுக்கியது
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1 டேபிள் ஸ்பூன்மல்லித் தூள்
  10. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. 1/2 டீஸ்பூன் பெப்பர் தூள்
  12. தேவைக்கு உப்பு
  13. கேப்ஸிகம் நறுக்கியது கொஞ்சம்
  14. மல்லித்தழை கொஞ்சம்
  15. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீஃபை நன்றாக கழுவி தண்ணீர் வடிய வைத்து விட்டு பின்னர் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெப்பர் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக புரட்டி வைக்கவும்.

  2. 2

    இதை ஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரை கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், நறுக்கிய கேப்ஸிகம், சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    இதில் தக்காளி, தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வெங்காயம், தக்காளி எல்லாம் நன்றாக வதங்கி‌ வரும் போது இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், பெப்பர் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை மாறும் வரை நன்றாக வதக்கவும்.

  7. 7

    பின்னர் இதில் வேக வைத்து வைத்திருக்கும் பீஃபை சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்

  8. 8

    எண்ணெய் மேலே படர்ந்து வரும் போது மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து இறக்கவும்.

  9. 9

    அருமையான பீஃப் ரோஸ்ட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes