தித்திக்கும் பருப்பு போளி (Paruppu poli recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

சுவையான போளி-அனைவருக்கும் பிடிக்கும்
#arusuvai1
#goldenapron3

தித்திக்கும் பருப்பு போளி (Paruppu poli recipe in tamil)

சுவையான போளி-அனைவருக்கும் பிடிக்கும்
#arusuvai1
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் மைதா
  2. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1/4ஸ்பூன் உப்பு
  4. 1/2கப் கடலைப்பருப்பு
  5. 1/2கப் வெல்லம்
  6. 1/2ஸ்பூன் ஏலக்காய்
  7. 2ஸ்பூன் நெய் (விருப்பப்பட்டால் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மாவை தயார் செய்து கொள்ளவும்.

    மைதா, மஞ்சள் தூள், உப்பு மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி குக்கரில் 4விசில் விட்டு இறக்கவும்
    அதை மத்து வைத்து நன்கு மசித்து கொள்ளவும்

  3. 3

    பின்னர் அடுப்பில் மசித்த பருப்புடன் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் நெய் சேர்த்து பருப்பு உருண்டை பிடிப்பதற்கேற்ப நன்கு சேர்த்து கிளறவும்

  4. 4

    பின்னர் பிசைந்த மைதா மாவை உருட்டி அதை தட்டி அதன் மேல் பருப்பு உருண்டை வைத்து மாவை இழுத்து ஒட்டி பிறகு கைகளால் தட்டி தோசை கல்லில் போட்டு சிறிது நெய்/எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வெந்ததும் சுட சுட பரிமாறவும்😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes