தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. பட்டாணி ஒரு கப்
  2. கேரட் சிறியது ஒன்று
  3. பீன்ஸ் 10
  4. ஒரு பெரிய வெங்காயம் ஒரு பெரிய தக்காளி
  5. தேங்காய் துருவல் ஒரு கப் கசகசா ஒரு ஸ்பூன் சோம்பு அரை டீஸ்பூன் முந்திரி 4 பச்சை மிளகாய்-2
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் தனியா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் கால் ஸ்பூன்
  7. தாளிப்பதற்கு ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஒரு பிரிஞ்சி இலை பட்டை ஒரு துண்டு ஒரு கிராம்பு
  8. புதினா இலை நான்கு கொத்தமல்லி இலை 3 ஸ்பூன்
  9. சர்க்கரை ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கேரட் பீன்ஸ் கழுவி பொடியாக நறுக்கவும் காய்ந்த பட்டாணி ஆக இருந்தால் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு சிட்டிகை உப்பு போட்டு 4 விசில் விட்டு குழையாமல் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.பச்சை பட்டாணி இருந்தால் கேரட் பீன்ஸ் உடன் சேர்த்து வதக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை ஒரு பட்டை கிராம்பு தாளித்து பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    பொடியாக அரிந்த கேரட் பீன்ஸ் சேர்த்து சுருள வதக்கி தேவையான உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு மூடி வைக்கவும். ஒரு தக்காளி துருவிய தேங்காய் ஒரு கப் ஒரு ஸ்பூன் கசகசா சோம்பு அரை ஸ்பூன் இரண்டு பச்சை மிளகாய் 4 முந்திரி சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து வெந்த காய்கறி கலவை உடன் சேர்த்து ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.

  3. 3

    கொத்தமல்லி புதினா இலை தூவி விடவும்.சுவையான வெஜ் குருமா தயார். உருளைக்கிழங்கு காலிபிளவர் ஒரு கப் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். என்னிடம் இருந்த காய்கறிகளை வைத்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes