உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)

Sahana D
Sahana D @cook_20361448

#hotel
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3உருளைக்கிழங்கு
  2. 3 ஸ்பூன் பிரெட் தூள்
  3. 3 ஸ்பூன் கார்ன் மாவு
  4. 1/2ஸ்பூன் வர மிளகாய் தூள்
  5. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் உருளைக்கிழங்கு தண்ணீர் உப்பு சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை மசித்து கொண்டு அதில் கார்ன் மாவு பிரெட் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு ஒரு கவரில் எண்ணெய் தடவி மாவை உருட்டி வைத்து மொத்தமாக தேய்த்து வட்ட வடிவிலான மூடியை வைத்து வட்டமாக எடுத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு அதில் பென்சில் வைத்து 2 கண் வைக்கவும். ஸ்பூன் வைத்து வாய் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சூடான உருளைக்கிழங்கு ஸ்மைலி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes