ஒரு ஜம்போ பேஸ்டரி

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel

ஒரு ஜம்போ பேஸ்டரி

ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2 பேஸ்டரி ஷீட் (Phyllo Dough frozen -ஆல் பர்பஸ் மாவு வெண்ணை கலந்தது. ரெடி மேட், ஒரு ஷீட் 16 inch x 8 inch)
  2. பில்லிங்:
  3. 2 கப் வேகவைத்து தோலுரித்து நசுக்கியது
  4. பில்லிங் (filling)செய்ய:
  5. ½ கப் நல்லெண்ணை
  6. ½ தேக்கரண்டி கடுகு
  7. ½ தேக்கரண்டி சீரகம்
  8. சிட்டிகை பெருங்காயம்
  9. ¼ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  10. 1 மேஜைகரண்டி கறிவேப்பிலை
  11. 2பச்சை மிளகாய், நறுக்கியது
  12. 1 தேக்கரண்டி இஞ்சி, நசுக்கியது
  13. ½ கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  14. ½ தேக்கரண்டி பூண்டு, நசுக்கியது
  15. ¼ கப் பச்சைபட்டாணி, கேரட் (frozen)
  16. கப் பிரேஷர் குக்கரில் வேகவைத்து தோலுரித்து துருவிய உருளை
  17. 1 மேஜை கரண்டி மசாலா பொடி
  18. தேவையானஉப்பு
  19. ¼ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    மிதமான நெருப்பின் மேல் வாணலி வைத்து சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க. மஞ்சள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்க. வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள்.. பட்டாணி, கேரட் சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள்
    வேகவைத்த உருளையை சேர்த்து வதக்க-2-3. மசாலா பொடி சேர்த்து கிளற.
    நெருப்பை குறைக்க. உப்பு சேர்த்து குலுக்குக. 2-3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க. கொத்தமல்லி சேர்க்க. பில்லிங் தயார். ஆற வைக்க-1 மணி நேரம்

  3. 3

    ப்ரிசரிலிறிந்து (freezer) Phyllo Dough frozen பேஸ்டரி ஷீட் எடுத்து ரேபிரிஜேரடரில் முதல் நாள் இரவே வைக்க. ஸ்டஃப் செய்வதற்க்கு 1 மணி முன் வெள்ளியே எடுக்க

    பேக்கிங் செய்ய:
    பேக்கிங் அடுப்பை ப்ரீஹீட் (preheat) செய்க 350F (176C)

    டிரே (tray) மேல் பார்ச்மென்ட் பேப்பர் மேல் போட்டு 2 பேஸ்டரி ஷீட் போடுக. நடுவில் பில்லிங்கை பரப்பி பேஸ்டரி ஷீட்டை மூடுக (படம்). பேக்கிங் அடுப்பின் உள் வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்க.

  4. 4

    பேக்கிங் அடுப்பின் உள் வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்க. பேகிங் முடிந்த பின், வெளியே எடுத்து ஆற வைக்க. கத்தியால் துண்டாக்கிக் கொள்ளுங்கள். மொத்தம் 8 துண்டுகள் வரும். ருசி பார்த்து பரிமாறுக. ஐஸ் கிரீம் கூட சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes