சோலா பூரி  (Chole Bhature)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சோலா பூரி சுலபமாக செய்வது எப்படி
என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மைதா மாவு வைத்து செய்யப்படும் இந்த பூரி சுவையாகவும் , பார்ப்பதற்கு பெரியதாகவும் இருப்பதால், நீங்களே செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#hotel

சோலா பூரி  (Chole Bhature)

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சோலா பூரி சுலபமாக செய்வது எப்படி
என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மைதா மாவு வைத்து செய்யப்படும் இந்த பூரி சுவையாகவும் , பார்ப்பதற்கு பெரியதாகவும் இருப்பதால், நீங்களே செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
ஐந்து பேர்
  1. 2கப் மைதா மாவு
  2. 2டேபிள் ஸ்பூன் ரவை
  3. 1/4கப் தயிர்
  4. 1டீஸ்பூன் சர்க்கரை
  5. உப்பு தேவையான அளவு
  6. 1டேபிள் ஸ்பூன் எண்ணை
  7. கொஞ்சம் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் மாவு, ரவை, தயிர், உப்பு, சர்க்கரை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து முப்பது நிமிடங்கள் ஊறவைக்கவும்.

  2. 2

    ஊறிய மாவை எடுத்து, மேலும் ஒரு முறை பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, பூரிக்கட்டை வைத்து சமமாக தேய்க்கவும்.

  3. 3

    பின்னர் வாணலியில் எண்ணையை சூடு செய்து ஒவ்வொரு பூரியாக போட்டு, மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சோழா பூரி தயார்.

  4. 4

    இப்போது ஹோட்டலுக்கே போகத்தேவையில்லை. வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சுலபமாக அனைவரும் சோலா பூரி செய்து சுவைக்கவும்.சென்னா மசாலாவுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  5. 5

    **இந்த பூரிக்கு சென்னா தான் பெரும்பாலான ஹோட்டலில் பரிமாறுகிறார்கள். எனது ரெசிபி பதிவில் சென்னா செய்முறை பதிவிட்டுள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes