இனிப்பு பிடிக்கொழுக்கட்டை

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

இனிப்பு பிடிக்கொழுக்கட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
12 பரிமாறுவது
  1. 1_1/2 கப் பச்சரிசி மாவு
  2. 1/2கப் பயத்தம்பருப்பு
  3. 1முழு தேங்காய் துருவியது
  4. 200கிராம் துருவிய வெல்லம்
  5. 10ஏலக்காய்
  6. 6டேபிள் ஸ்பூன் நெய்
  7. 1/2ஸ்பூன் சுக்குத் தூள்
  8. 1/8ஸ்பூன் ஜாதிக்காய் பொடி
  9. 1/4ஸ்பூன் உப்பு
  10. 2_1/2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி ஐ ஊறவைத்து அலசி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு பவுடராக்கி ஜலித்து கொள்ளவும் அந்த நாளே கொழுக்கட்டை செய்யறது என்றால் 1: 2 கப் தண்ணீர் சரியாக இருக்கும் செய்து வைத்த மாவு என்றால் 1: 2_1/2 தேவைப்படும்

  2. 2

    பயத்தம்பருப்பு ஐ வெறும் வாணலியில் போட்டு வறுத்து மலர வேகவைத்து கொள்ளவும் தேங்காய் ஐ துருவி கொள்ளவும்

  3. 3

    வாணலியில் வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  4. 4

    4 நிமிடங்கள் வரை கொதித்ததும் தேங்காய் துருவல் வேகவைத்த பயத்தம்பருப்பு சேர்த்து கலந்து விடவும்

  5. 5

    பின் இடித்த ஏலக்காய் ஜாதிக்காய் பொடி சுக்குத் தூள் 4 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டியில்லாமல் கிளறி இறக்கவும்

  6. 6

    ஆறியதும் நன்கு பிசைந்து கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பிடித்து வைக்கவும்

  7. 7

    பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஆவி வந்ததும் ரெடியாக உள்ள கொழுகட்டைகளை அடுக்கி 8_10 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்

  8. 8

    சுவையான ஆரோக்கியமான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes