பட்டர் பிஸ்கெட்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1கப் மைதா
  2. 1/4கப் பால் பவுடர்
  3. 1/2கப் பவுடர் சுகர்
  4. 1/2கப் வனஸ்பதி
  5. 4டேபிள் ஸ்பூன் பால்
  6. 3/4ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/4ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1ஸ்பூன் வெனிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    வனஸ்பதி உடன் பவுடர் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு ஒரு முறை பீட் செய்யவும்

  2. 2

    மைதா பால் பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஜலித்து கொள்ளவும்

  3. 3

    பின் பீட் செய்த வனஸ்பதி சர்க்கரை கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கவர் செய்து பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வரை ஃபிரிட்ஜில் வைக்கவும்

  5. 5

    பின் எடுத்து மீண்டும் நன்கு பிசைந்து ஒரே அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  6. 6

    பின் லேசா தட்டி வனஸ்பதி தடவி மைதா டஸ்ட் செய்து ட்ரேயே ரெடி செய்து அதில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கி கொள்ளவும்

  7. 7

    பின் மைக்ரோவ் அவனில் கன்வெக்சன் மோல்டில் மாற்றி பத்து நிமிடம் வரை சூடாக்கி அதில் ரெடியா உள்ள பிஸ்கட் ட்ரேயை வைத்து 15_17 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  8. 8

    பின் ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து வெளியே எடுத்து நன்கு ஆறவிட்டு டப்பாவில் போட்டு வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes