தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1/4கிலோ சிக்கன்
  2. 1/4 கப் துவரம் பருப்பு
  3. 6-8 சின்ன வெங்காயம்
  4. 1நறுக்கிய தக்காளி
  5. 1கப் நறுக்கிய முருங்கைக்காய் கத்திரிக்காய் (இதனுடன் விருப்பப்பட்ட காய்கள்)
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1டீஸ்பூன் சிக்கன் மசாலா
  10. 1டீஸ்பூன் தனியாத்தூள்
  11. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் துவரம் பருப்பை இரண்டு முறை கழுவி தண்ணீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து 2 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கரம் மசாலா சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பச்சை வாசனை போன பின் சிக்கனை சேர்த்து சிக்கனை 5 நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும்

  3. 3

    சிக்கனை வதக்கிய பின் அதில் நறுக்கிய முருங்கைக்காய் யும் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சிக்கன் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வதக்கவும்

  4. 4

    பச்சை வாசனை போன பின் அடுப்பை குறைந்த தீயில் வைத்து சிக்கனை முருங்கையும் முக்கால் பாகம் வேகும் வரை வேகவைக்கவும் (தண்ணீர் ஊற்ற தேவையில்லை)

  5. 5

    சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் பிறகு அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  6. 6

    பிறகு வேக வைத்த பருப்பை நன்றாக கடைந்து சிக்கன் மசாலாவில் ஊற்றி நன்றாக கிளறி மிதமான தீயில் 5 வைத்து இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes