கொள்ளு தூதுவளை ரசம்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

கொள்ளு தூதுவளை ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 50 கிராம் கொள்ளு
  2. 3 காய்ந்த மிளகாய்
  3. 1நெல்லிக்காய் அளவு புளி
  4. 1 தக்காளி
  5. 5 பல் பூண்டு
  6. 10தூதுவளை இலை
  7. 2 ஸ்பூன் மிளகு சீரகத்தூள்
  8. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. அரை ஸ்பூன் தாளிக்க கடுகு சீரகம்
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கொள்ளை குறைந்தது 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 1 லிட்டர் தண்ணீர்விட்டு வேக வைத்து எடுக்கவும்

  2. 2

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் மிளகாய் பூண்டு மிளகு சீரகம் மஞ்சள்தூள் உப்பு தக்காளி புளி ஆகியவற்றை ஒன்றிரண்டாக உடைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து அத்துடன் தூதுவளை இலை ஒன்றிரண்டாக உடைத்து வைத்த பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் பிறகு அத்துடன் மஞ்சள் பொடி கொள்ளு வேகவைத்த தண்ணீர் ஊற்றவும்.

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து நுரை கூடி வரும் பொழுது அடுப்பை அனைத்து விட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes