தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. சிக்கன் வேக வைக்க
  2. 150 கிராம் எலும்பு இல்லாத சிக்கன்
  3. 1/2டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. ஸ்டப்பிங் செய்ய
  6. வேக வைத்த சிக்கன்
  7. 50 கிராம் வெங்காயம்
  8. 2டே ஸ்பூன் கேப்ஸிகம்
  9. 10 கிராம் முந்திரி
  10. 2 பச்சை மிளகாய்
  11. 6 கருவேப்பிலை
  12. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  14. 1டீ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  15. உப்பு தேவையான அளவு
  16. 1டீ ஸ்பூன் மிளகு தூள்
  17. 2டீ ஸ்பூன் கொத்த மல்லி தழை
  18. சிக்கன் ஸ்டாக் (சிக்கன் வேக வைத்த தண்ணீர்)
  19. கிரேப்ஸ் செய்ய
  20. 1 கப் மைதா
  21. 1/2 கப் பால்
  22. 1/2 கப் தண்ணீர்
  23. 2டே ஸ்பூன் வெண்ணெய்
  24. உப்பு தேவையான அளவு
  25. 1 முட்டை
  26. 1டே ஸ்பூன் எண்ணெய்
  27. மைதா பேஸ்ட் செய்ய
  28. 1டே ஸ்பூன் மைதா +1டே ஸ்பூன் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கன் உடன் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.வேக வைத்த சிக்கனை பொடிதாக பிச்சி வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் சூடு ஆனதும் சோம்பு சேர்க்கவும்.பின் முந்திரி சேர்க்கவும் கூடவே வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கேப்ஸிகம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இப்போம் மஞ்சள்,மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

  5. 5

    கூடவே சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும் (சிக்கன் வேக வைத்த தண்ணீர்). உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.

  6. 6

    சிக்கன் மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.பைனலாக கொத்த மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

  7. 7

    கிரேப்ஸ் செய்ய மிக்சியில் மைதா,முட்டை,பால்

  8. 8

    தண்ணீர்,வெண்ணெய்,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  9. 9

    கிரேப்ஸ் மாவு ரெடி

  10. 10

    இப்போது ஒரு தவாவில் தோசை மாதிரி ஊத்தி மாத்தி போட்டு எடுக்கவும்.

  11. 11

    மைதா பேஸ்ட் செய்து வைக்கவும்.

  12. 12

    ஒரு கிரேப் எடுத்து அதன் நடுவில் சிக்கன் ஸ்டப்பிங் வைத்து.படத்தில் கொடுத்தது போல செய்யவும்.பின் அதன் மேல் மைதா பேஸ்ட் தடவி

  13. 13

    படத்தில் கொடுத்து இருப்பது போல மடிக்கவும்.

  14. 14

    மடித்து பாக்கெட் மாதிரி செய்து.ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி அதில் இந்த கிரேப்ஸ் வைத்து

  15. 15

    மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.பின் மாத்தி போடவும்.

  16. 16

    சுவையான சிக்கன் கிரேப்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes