கொள்ளு ரசம்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 ஸ்பூன் கொள்ளு
  2. இரண்டு ஸ்பூன் மிளகு
  3. 1ஸ்பூன் சீரகம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  6. 1 பூண்டு
  7. மல்லி இலை சிறிதளவு
  8. 2 ஈர்க்கு கருவேப்பிலை
  9. 2 காய்ந்த மிளகாய்
  10. 2 ஸ்பூன் எண்ணெய்
  11. 1/2 ஸ்பூன் கடுகு
  12. 1/2 வெங்காயம்
  13. 2 தக்காளி
  14. ஒரு எலுமிச்சை அளவு புளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் கொள்ளை போட்டு வறுத்து எடுத்து நரநரவென அரைத்துக் கொள்வோம். ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு,சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய், தோலுடன் பூண்டு, சிறிதளவு மல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்வோம்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டு வெடித்தவுடன்,வெங்காயம் சேர்த்து வதங்கும் நேரத்தில் இன்னொரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி அரைத்து வைத்த மசாலா சேர்த்து நன்கு கையால் கரைத்து புளிக் கரைசலையும் சேர்த்துக் கொள்வோம்.

  3. 3

    வெங்காயம் வதங்கியவுடன் அதில் கொள்ளை போட்டு வதக்கி கரைத்த கரைசலையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி பரிமாறலாம். சூடான சுவையான கொள்ளு ரசம் தயார்.🥣🥣🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes