சுவையான செட்டிநாடு கத்திரிக்காய் கோசுமல்லி (Brinjal Goshmalli)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஹோட்டல்களில் பிரியாணியுடன் சைட் டிஷ் ஆக சேர்த்து கொடுக்கப்படும்.
#myfirstrecipe

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 to 6 பரிமாறுவ
  1. 1/2 கிலோகத்தரிக்காய், அளவான தக்காளி 4,
  2. 15சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை,
  3. 1 1/2 tbspமிளகாய்த்தூள் , மஞ்ச சீரகத் தூள் 1/2 tbsp,
  4. தேவையான அளவுகல்லுப்பு , புளி
  5. தேவையான அளவுதண்ணீர்
  6. தாளிக்க
  7. 1/4 டீஸ்பூன்சோம்பு ,
  8. 3 - 4வெந்தயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் குக்கரில் தண்ணீர் ஊற்றி, கத்திரிக்காய் கழுவி 4 துண்டுகளாக நறுக்கி போடவும், மற்றும் தக்காளியையும் முழுதாக சேர்த்து 4 விசில் வரை வேகவிடவும்.

  2. 2

    அதன் பிறகு அதிலிருந்து நீரை மட்டும் வடித்து விட்டு கத்திரிக்காய் மற்றும் தக்காளியில் முடிந்த அளவு தோலை உரித்து மசித்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை, சோம்பு, வெந்தயம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

  4. 4

    பின்பு மசித்து வைத்ததையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    காய் வேக வைத்த நீரை சேர்த்து, புளியைக் கரைத்து சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  7. 7

    சுவையான கத்திரிக்காய் கோஸ்மல்லி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes