மசாலா போண்டா

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#leftover
உருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது

மசாலா போண்டா

#leftover
உருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. மீதமான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தேவையான அளவு
  2. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  3. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/8 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. மேல் மாவு:
  7. 1 கப் கடலைமாவு
  8. 1_1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1 ஸ்பூன் சீரகத்தூள்
  10. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  11. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. உப்பு தேவையான அளவு
  13. 2 சிட்டிகை சோடா உப்பு
  14. தண்ணீர் தேவையான அளவு
  15. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    மீதமான உருளைக்கிழங்கு உடன் கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பின் அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் கொழ கொழ வென்று இருந்தால் அதனுடன் சிறிதளவு அவலை வறுத்து கரகரப்பாக பொடித்து போட்டு பிசையவும்

  3. 3

    கடலைமாவு உடன் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி தோசை மாவு பதத்தில் பிசைந்து கரைத்து கொள்ளவும் பின் அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  4. 4

    பின் ஊறிய மாவில் சோடா உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் உருளைக்கிழங்கு உருண்டையை மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  6. 6

    மாலை வேளையில் சூடான ஒரு கப் டீ உடன் சுடச் சுடச் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes