இனிப்பு சீடை / sweet Vella seedai

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

இனிப்பு சீடை / sweet Vella seedai

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1கப் அரிசி மாவு
  2. 2டீஸ்பூன் உளுந்தமாவு
  3. 1டேபிள்ஸ்பூன் எள்ளு
  4. 2டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 1டேபிள்ஸ்பூன் வெண்ணை (அ) நெய்
  6. 1/4கப் வெல்ல கரைசல்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பை பற்ற வைத்து வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்துக்கொள்ளவும் சிவக்க வறுக்க கூடாது... உளுந்தை பொன்னிறமாக வறுத்து ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாக கலந்து சலித்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு இதில் எள்ளு தேங்காய் துருவல் வெண்ணை அல்லது நெய் சேர்க்கவும்... இவை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்

  4. 4

    வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி மாவில் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்

  5. 5

    பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்... உருட்டிய உருண்டைகளை 15 நிமிடம் அப்படியே வைக்கவும்

  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் வைத்து உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் உருண்டைகள் வெடிக்கும் அதனால் 5-6?உருண்டைகளாக மட்டுமே போட்டு பொரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes