தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. மஷ்ரூம்-1 பாக்கெட்
  2. பெரிய வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. குடைமிளகாய்-1/2
  5. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  6. பட்டை கிராம்பு பிரியாணி இலை சிறிது
  7. சோம்பு-1/4 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது
  9. மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
  10. மல்லித்தூள்-1 டீஸ்பூன்
  11. மிளகாய்த்தூள்-1/2 டீஸ்பூன்
  12. கரம் மசாலா தூள்-1 டீஸ்பூன்
  13. மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
  14. எண்ணெய்-3 டீஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. கஸ்தூரி மேத்தி -1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. பெரிய வெங்காயம் தக்காளி குடைமிளகாய் காளான் ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு பட்டை வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது தக்காளி போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    மாசலா தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..7-10 நிமிடங்கள் வேகவிடவும்.. காளான் வெந்ததும் சிறிது கஸ்தூரி மேத்தி இலையும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.. சூடான சுவையான சப்பாத்தி, பரோட்டா, ரெட்டி, நான் போன்றவற்றிக்கு ஏற்ற பெப்பர் மஷ்ரூம் கிரேவி ரெடி.

  3. 3

    நன்றி.ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes