சப்பாத்தி வெஜ் ரோல்

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

சப்பாத்தி வெஜ் ரோல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பேருக்கு
  1. கோதுமை மாவு - 1/2 கப்
  2. மைதா மாவு - 1/2 கப்
  3. பெரிய வெங்காயம் - 2
  4. தக்காளி - 2
  5. சீரகம் - சிறிதளவு
  6. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  7. மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
  8. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  9. உப்பு - தேவையான அளவு
  10. சர்க்கரை - 1/2 ஸ்பூன்
  11. உருளைக்கிழங்கு - சிறியது - 1
  12. கேரட் - 1
  13. புதினா - சிறிதளவு
  14. இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
  15. நெய் - தேவையான அளவு
  16. தக்காளி சாஸ் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவு சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    இதை 30 நிமிடங்கள் தனியாக வைக்க வேண்டும்.

  4. 4

    அடுப்பில் எண்ணெய் சூடு செய்து சீரகம் போட வேண்டும்.

  5. 5

    சீரகம் வெடித்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

  6. 6

    வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். அதான் வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

  7. 7

    வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

  8. 8

    வதங்கியவுடன் அவற்றில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்க்க வேண்டும்.

  9. 9

    நன்றாக வதங்கியவுடன் தோல் உரித்த உருளைக்கிழங்கை நீள வாக்கில் வெட்டி, காரட்டை நீள் வாக்கில் வெட்டி இரண்டையும் போட வேண்டும். இதனுடன் புதினா சேர்க்க வேண்டும்.

  10. 10

    நன்றாக கலந்து 5 முதல் 7 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

  11. 11

    இப்போது மசாலா ரெடி!

  12. 12

    பிசைந்து வைத்த கோதுமை மாவை உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவ மாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  13. 13

    தோசை கல்லை சுட வைத்து தேய்த்த மாவை போட்டு அதான் மேல் நெய் தடவ வேண்டும். வெந்தவுடன் புரட்டிப் போட்டு மறுபக்கம் வேக வைக்க வேண்டும்.

  14. 14

    சப்பாத்தியை தனியாக எடுத்து வைத்து அதான் மேல் தக்காளி சாஸை பரப்பி விட வேண்டும். அதன் மேல் மசாலா கலவையை நடுவில் வைத்து கீழ் புறம் மடித்து, மற்ற இரு பக்கங்களிலும் மடிக்க வேண்டும்.

  15. 15

    இப்போது சப்பாத்தி ரோல் ரெடி!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes