பிரசவ லேகியம்

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.

*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

#Ilovecooking... #moms

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 100 கிராம் சுக்கு
  2. 25 கிராம் மிளகு
  3. 10 கிராம் திப்பிலி
  4. 25 கிராம் கடுகு
  5. 25 கிராம் சீரகம்
  6. 25 கிராம் அரத்தை
  7. 25 கிராம் ஓமம்
  8. 5 ஏலக்காய்
  9. 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  11. 100 கிராம் தேன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சுக்கு மற்றும் அரத்தையும் ஒன்னும் பாதியுமாக தட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வெறும் வாணலியில் ஒவ்வொரு பொருட்களாக தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து ஒரு சல்லடை வைத்து சலித்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சூடேற்றி சலித்து வைத்துள்ள பொடியை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.பின் அதே வானிலையில் தேன் மற்றும் நெய்யை ஊற்றி லேகியம் பதத்தில் வந்த பிறகு எடுத்து ஆற விட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். இதனை பிரசவித்த தாய்மார்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு உருண்டையும் மற்றும் இரவில் சாப்பிட்ட பிறகு ஒரு உருண்டையும் எடுத்துக்கொண்டால் தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (5)

எழுதியவர்

Senthamarai Balasubramaniam
அன்று

Similar Recipes