சோம்பு டீ (Sombu tea recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

#mom தாய்ப்பால் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு ஆதாரம். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகாது. அதற்க்கு உடம்பில் ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடு காரணம் ஆகலாம். அவற்றை சரி செய்ய பூண்டு, பால், மீன், முட்டை, பாவற்காய், பேரிச்சம்பழம் ஆகியவை அடங்கும். இது தவிர நம் அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய சோம்பும் இதில் அடங்கும். சோம்பு உணவு ஜீரணம் ஆவதற்கும், உடம்பில் நீர் சத்தை தக்க வைத்து கொள்வதற்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் செய்கிறது. தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் சோம்பு டீ குடிப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றின் செய்முறை இங்கு காணலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 நபருக்கு
  1. 1/2 ஸ்பூன்சோம்பு
  2. 1/4 கப்பால்
  3. - 3/4 கப்தண்ணீர்
  4. டீ தூள் / இலை - தேவையான அளவு
  5. சர்க்கரை - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீரை சுட வைத்து அதில் சோம்பை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

  2. 2

    சோம்பின் முழு சக்தியும் அதில் இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

  3. 3

    பின் அவற்றில் பால், டீ தூள் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

  4. 4

    பின் அவற்றை வடிகட்டி சர்க்கரை சேர்த்து சூடாக பருகலாம்.

  5. 5

    ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes